சிவகங்கை: கண்மாயை சேதப்படுத்தியதாக இரண்டு பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பனையனேந்தல் கண்மாய் இந்த கண்மாய் பகுதியில் சாலை அமைப்பதற்காக கண்மாயை சாலை ஒப்பந்ததாரர் ஆதிமூலம் வயது (58) மற்றும் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபால் வயது (50) ஆகிய இருவரும் உடைத்து சேதப்படுத்தியதாக பனையனேந்தல் குரூப் கிராம நிர்வாக அலுவலர் முகமது ஷாஜகான் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சிவகணேசன் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.