டயர் மோசமான நிலையில் இயக்கப்பட்ட அரசு பேருந்து

62பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்து டயர் மோசமாக வெடிக்கும் நிலையில் காணப்பட்டதால் பொதுமக்கள் புகாரை அடுத்து பயணிகளை இறக்கி விட்டு ஓட்டுனர் டிப்போவுக்கு பேருந்தை இயக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான TN 58 N0732 எண் கொண்ட நகரப் பெருந்தானது மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் வழியாக பிரமனூர் வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தானது திருப்புவணம் நோக்கி வந்த போது அந்த பேருந்தின் டயர்கள் நான்குமே வழுக்கை ஏற்பட்டு மோசமான நிலையில் இருந்ததுடன் ஓட்டுனர் இருக்கை கீழே உள்ள டயர் மட்டும் வீக்கம் ஏற்பட்டு வெடிக்கும் நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தை நிறுத்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக பேருந்தை நிறுத்தி பயனிகளை அங்கேயே இறக்கி விட்டு பழுது நீக்கம் செய்வதற்காக பணிமனை நோக்கி திருப்பி இயக்கியுள்ளார். இந்நிலையில் பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டதால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடத்துனர் பேருந்தின் டயர் பிரச்சனை குறித்து பயணிகளுக்கு எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி