வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள நவாத்தாவு பகுதியைச் சேர்ந்தவர் செல்வா வயது (24). இவர் கொன்னக்குளம் ரோடு பகுதியில் நடந்த சென்று கொண்டுருந்தார். அப்பொழுது கீழ பசலை பகுதியைச் சேர்ந்த அஜித் (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரும் 2. 5 அடி நீளமுள்ள இரண்டு வாளை வைத்து செல்வாவை மிரட்டி அவரிடமிருந்த ரூ 500 பறித்து சென்றதாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.