வட மாடு மஞ்சு விரட்டு போட்டியில் 14 காளைகள் பங்கேற்பு

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தேளியில் ஸ்ரீ அழகிய நாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. வட்டமாக அமைக்கப்பட்ட திடலில் நடுவே ஒவ்வொரு சுற்றிலும் வடத்தால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களில், 9 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழுவினர் அடக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 14 காளைகளும், 126 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினார்கள். ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்போோட்டியினை சிவகங்கை, திருமாஞ்சோலை, தேளி, பூவந்தி, திருப்புவனம் மடப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி