சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலிருந்து சேத்தூருக்கு சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் செல்வகுமார் இயக்கியுள்ளார். பேருந்தில் நடத்துனர் பாஸ்கரன் மற்றும் 10 பயணிகள் இருந்த நிலையில் அரசு பேருந்து தாயனூர் விளக்கு அருகே வந்தபோது, வயலில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிய நெஞ்சாத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயராமனின் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியது. விபத்தில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி ஜெயராமனின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.