சிவகங்கை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பாக T. புதூரில் அமைந்துள்ள அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு தியானம் நடைபெற்றது. தியானத்தை மனவளக்கலை பேராசிரியர். ரேணுகா தேவி அவர்கள் நடத்தினார்கள்.
இந்த நிகழ்விற்கு சிவகங்கை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் மதிப்பிற்குரிய நீதியரசர். முத்துக்குமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக கிழக்கு சுற்றுச்சாலைக்கு அறிவுத்திருக்கோவில் சாலை என பெயரிடப்பட்டு, நிறுவப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்கள். மனவளக்கலை பேராசிரியர். கரு. வெற்றிவேந்தன் அவர்கள் வேதாத்திரி மகரிஷி பற்றியும் உலக அமைதிக்காகவும் இயற்றிய பாடல்களை "மனவளக்கலை தந்திட்ட எந்தன் மன்னவரே" என்ற புத்தகமாக அச்சிட்டு இந்த நிகழ்வில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தகத்தை தேசிய நல்லாசிரியர். S. கண்ணப்பன் அவர்கள் வெளியிட, அறங்காவலர்கள் சுந்தரமாணிக்கம், செல்வராஜா, ஜெயசித்ரா அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.