சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெற்கு சந்தனூர் ஊராட்சிக்குட்பட்ட தேவரேந்தல் கிராமத்தில் காக்குடி கண்மாய் உள்ளது. தற்போது பெய்த மழையால் கண்மாய் நிறைந்து உபரி நீர் கழுங்கு வழியாக வெள்ளம் போல் வெளியேறி வருகிறது. இந்த நீர் அருகில் உள்ள தரைப்பாலம் வழியாக செல்வதால் தேவரேந்தல் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட அருகில் உள்ள நெட்டூர், இளையான்குடி மானாமதுரை பகுதிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகள் அரையாண்டு தேர்வு எழுத இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயர் மட்ட பாலத்தை அமைத்திட வேண்டுமென தேவரேந்தல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.