கடனால் வீடு ஜப்தி - அவமானத்தால் இளைஞர் தற்கொலை

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (55) இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் முத்துச்சாமி (22), முத்துக்காளை (19), சண்முகவள்ளி( 16) நாகஜோதி (14) என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சுப்பையா வீடு கட்டுவதற்காக பணம் பற்றாக்குறை காரணமாக தனியார் நிறுவனத்திடம் கடந்த 2016ல் நான்கு லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அடமானமாக வீட்டுப்பத்திரத்தை ஒப்படைத்துள்ளார். மூன்று ஆண்டுகளில் ஆறு லட்ச ரூபாய் வரை கடன் திரும்ப செலுத்தியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடன் தவணை செலுத்த வில்லை. இந்நிலையில் வட்டியுடன் மூன்று லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த 14ம் தேதி தனியார் வங்கி அதிகாரிகள் வசூலிக்க வந்துள்ளனர். ஆனால் தனியார் வங்கி ஊழியர்கள் உடனே பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம் செலுத்ததால் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். இந்த தகவல் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுப்பையாவின் 2வது மகன் முத்துக்காளை ஊருக்கு வந்து நிதி நிறுவனத்தினர் பூட்டிச் சென்ற பூட்டை உடைத்து வீட்டினுள் சென்று கதவை பூட்டி கொண்டார். இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போது தனது தாயின் சேலையால் மின்விசிறி மாட்டும் கொக்கியில் து£க்கு போட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you