உகாண்டா: 70 வயதான மூசா ஹசஹ்யா கசேரா என்ற நபர் 12 முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு 102 குழந்தைகளும், 578 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். பிரபல வலைப்பதிவாளர் கைலாஷ் என்பவர் மூசாவை சந்தித்து வீடியோ எடுத்து வெளியிட தற்போது வைரலாகியுள்ளது. மூசா கடந்த 1972-ல் தனது 17வது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டார். அவரின் இளைய மனைவியின் வயது 35. மூசாவின் பிள்ளைகளின் வயது 10-ல் இருந்து 50-க்குள் உள்ளது.