சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் வருடந்தோறும் மார்கழி அஷ்டமி தினத்தன்று சிவபெருமான் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு படியளக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். மார்கழி அஷ்டமி தினத்தை முன்னிட்டு சுவாமிகள் ரிஷப வாகனத்தில் சப்பங்களுக்கு எழுந்தருளிய பின்னர் சப்பரங்கள் பாகவத் அக்ரஹாரம் வழியாக மெயின் பஜார், 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலை வந்தடைந்ததும் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்பும் பின்பும் நெல் நவ தானியங்கள் உள்ளிட்டவற்றை தூவியபடி சென்றனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.