சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் குட்வில் இன்டர்நேஷனல் பிளே ஸ்கூலில் மழலை மாணவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இப்பள்ளியில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மழலை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு விளையாட்டு, கவிதை கதை பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் பூமிநாதன் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார். பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மழலை மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்கள் சாண்டா கிளாஸ் வேடமணிந்து பங்கேற்றனர். பின்னர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாண்டா கிளாஸ் வேடமடைந்த மாணவர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர் சுபாஷிணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.