மூன்று தங்க பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

57பார்த்தது
புது டெல்லியில் நேஷனல் கராத்தே பெடரேஷன் ஆப்ஃ இந்தியா சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி டல்கோட்ரா உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நாகர்ஜூன் சிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்களான ஜெகத்அர்சிக் மற்றும் நளமிர்னாலினி கலந்து கொண்டார்கள். இதில் 10வயது ஆண்கள் கட்டா பிரிவு மற்றும் 34 கிலோ எடை பிரிவுகளிலும் வெற்றி பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இதே போல் பெண்களுக்கானா பெண்கள் 14வயது பிரிவில் கட்டா பிரிவில் நளமிர்னாலினி முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றார். இருவரும் மூன்று தங்க பதக்கங்களை வென்று விட்டு மானாமதுரைக்கு ரயில்வே நிலையத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாகும் வரவேற்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி