அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் வெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்துக்கு வருவதற்கு பயப்படும் நிலை உள்ளது, யார் எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்தார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் கண்டுபிடிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.