காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த மமக செயலாளர்

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலையூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் கடந்த மாதம் பணம் எடுக்க சென்ற அஜய் என்ற இளைஞர் ஏடிஎம் கார்டை ஏடிஎம்மில் செலுத்தி பணம் வெளிவரவில்லை என சென்றுவிட்டார். அவருக்கு பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அகமதுஜலால் வந்த பொழுது ஏடிஎம்மில் ரூ. 10ஆயிரம் தொகை இருந்ததை பார்த்து அதை இளையான்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் தனக்கு பணம் வரவில்லை ஆனால் கணக்கில் கழிக்கப்பட்டுள்ளது குறித்து வங்கியில் அஜயின் தாயார் புகாரளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய வங்கி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அஜயின் தாய் மாரீஸ்வரியிடம் இளையான்குடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பு ரூ. 10ஆயிரம் பணத்தை அளித்தார். மாரீஸ்வரி, அகமதுஜலாலுக்கு நன்றி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி