அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிமுக, பாஜக வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாணவி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை, 14 பேர் தங்கள் செல்போன் மூலமாக எடுத்துள்ளனர் என்றும் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம் என நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.