
மேல துறையூர் பகுதியில் மணல் திருட்டு: ஒருவர் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மேல துறையூர் பகுதியில் உள்ள நாட்டார் கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா, இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில், மேல துறையூரை சேர்ந்த நிவாஸ் (33) என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.