தமிழ்நாடு முதலமைச்சரின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், இன்று சிவகங்கை அருகே உள்ள படமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணாக்கர்களின் கற்றல் திறன் மற்றும் பள்ளியில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும், ரூ. 30. 00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் படமாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், துணை சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் நல வாழ்வு மையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு மற்றும் முகாம்கள் நடத்தப்படும் விவரம், மருந்துகள் இருப்பு, தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்தும், படமாத்தூர் ஊராட்சி உயர்நிலை பள்ளிக்கென நபார்டு திட்டம் 2023-2024ன் கீழ் ரூ. 105. 90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 05 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் குறித்தும், APO 4PY படமாத்தூர், நியாயவிலைக்கடையின் வாயிலாக குடிமைப்பொருட்கள் பெறப்படும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் தரம் மற்றும் இருப்பு ஆகியன குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.