சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே
இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பிரான்ஸ் கோதிக் கலை சிற்ப நுணுக்கத்துடன் கட்டப்பட்டதாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மாதந்தோறும் மக்கள் வருவது வழக்கம். கிறிஸ்மஸ் விழவையெட்டி பங்குத்தந்தை முனைவர் இம்மானுவேல் தாசன் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு வான வேடிக்கை வெடிக்கப்பட்டு சிறப்பு திருப்பலி மற்றும் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிப்பு அறிவிக்கப்பட்டது.