இந்தியாவில் வாட்ஸ்அப்-க்கு தடை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார். அந்த மனுவில், வாட்ஸ்அப் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதி, 2021-க்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.