புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறிஞர் அண்ணா 116ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி அண்ணா சிலைக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யாநாதன் ஆகியோர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இதில் அறந்தாங்கி திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.