நூலிழையில் தங்கத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா

77பார்த்தது
டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா ஒரு செ.மீ. தூரத்தில் தங்கத்தை இழந்தார். பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். இரண்டாம் இடம் பிடித்த நீரஜ் சோப்ராவிற்கு 12,000 டாலர் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி