“அண்ணாவின் பணிகளை போற்றுவோம்” - தவெக விஜய் பதிவு

54பார்த்தது
“அண்ணாவின் பணிகளை போற்றுவோம்” - தவெக விஜய் பதிவு
பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில், “சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, 'மதராஸ்' என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில். அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை போற்றி மகிழ்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி