
புதுவையில் மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் சந்திப்பு
புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு முறை பயணமாக வருகை தந்த மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பொன்னாடை, பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதனை அடுத்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.