காரைக்கால் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே ரோட்டரி கிளப் காரைக்கால் சென்டினியல் சார்பில் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை ஆய்வாளர் லெனின் பாரதி பரிசுகளும் இனிப்புகளும் வழங்கி பாராட்டினார்.