முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த மன்மோகன் சிங் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் அவர்களின் திருஉருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் மௌன அஞ்சலியும் செலுத்தினர்.