காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனிபகவான் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று (டிசம்பர் 22) ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதற்கு முன்னதாக மஞ்சள், பால், தயிர், சந்தனம் போன்ற பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.