காரைக்காலில் உள்ள காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாதம் முன்னிட்டு இன்று 2000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அம்மனுக்கு விரதமிருந்து பால்குடம் ஏந்தி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அலகு காவடி, பால்குட ஊர்வலம் காரைக்கால்மேடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அருள்மிகு ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தை வந்து அடைந்தது.