கோவையை சேர்ந்த நாகமாணிக்கம் (73) - ராஜசுலோச்சனா (63) தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாக பேசாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் மாடியில் இருந்து கீழே வந்த நாகமாணிக்கம் உணவை எடுத்துக்கொண்டு மேலே உள்ள அறைக்கு சென்றுள்ளார். இதனிடையே திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இது தெரியாத ராஜசுலோச்சனா 6 நாட்கள் வீட்டில் இருந்துள்ளார். மேலிருந்து துர்நாற்றம் வீசவே சென்று பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.