காரைக்காலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி ஆன்மிக இயக்கம் தஞ்சை கிழக்கு பகுதி காரைக்கால் மன்றத்தில் 2025 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை, உலக நன்மை வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தணிய வேண்டியும் கேக் வெட்டி பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர். வழிபாட்டில் 100க்கும் மேற்பட்ட சக்தி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.