பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 'முபாசா : தி லயன் கிங்'. இப்படம் கடந்த 20-ந் தேதி வெளியானது. இந்த படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 16 நாட்களில் சுமார் ரூ.150 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.