உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் பிரபு தற்போது வீடு திரும்பியுள்ளார். பிரபல நடிகர் பிரபு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மூளையில் வீக்கம் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிரபு இன்று வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.