

சீயாமளாதேவி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது
காரைக்கால் மாவட்டம் கீழஓடுதுறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீயாமளாதேவி அம்மன் ஆலயத்தில் கடந்த 02ம் தேதி அன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய விமானங்கள் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.