டெல்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டியானது நடைபெற்றது.
இதில் காரைக்கால் மாவட்டம் அலன் திலக் சர்வதேச கராத்தே பயிற்சி பட்டறையில் 14 கராத்தே மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனை அடுத்து வெற்றி பெற்ற 14 கராத்தே மாணவர்களும் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.