
காரைக்கால்: அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பு
அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட அதிமுக துணை செயலாளரும், காரைக்கால் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அசனா தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜக அதிமுக கூட்டணி சிறுபான்மை மற்றும் தலித் மக்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் அதிமுகவிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.