
புதுச்சேரி ஆளுநர் ரமலான் வாழ்த்துச் செய்தி
புனித ரமலான் நோன்பு சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ, உணர்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டுகிறது.ரமலான் நோன்பின் பயனாக அனைவரது வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் செழிக்க இறைவன் அருள் புரியட்டும் என புதுவையில் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புதுச்சேரி ஆளுநர் மனமார்ந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.