காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரி காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.