சூலூர் - Sulur

பேருந்தை சிறைபிடித்த பயணிகள்!

பேருந்தை சிறைபிடித்த பயணிகள்!

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று செப்டம்பர் 5 அன்று காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறினர். பேருந்து புறப்பட்ட பின், நடத்துனர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுத்த கூடாது என்று கூறி, பயணிகளை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள், இது குறித்து ஊர் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, ஊர் பொதுமக்கள் பேருந்தை சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా