காவல் ஆய்வாளருக்கு சப்ரைஸ் கொடுத்த வியாபாரிகள் !

50பார்த்தது
கோவை மாவட்டம் சூலூரில் அதிகரித்து வந்த குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தி சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்தியதில் ஆய்வாளர் மாதயனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையின் கீழ் சூலூர் காவல்துறையினர் பல்வேறு சவால்களை சமாளித்து குற்ற சம்பவங்களை வெகுவாக குறைத்தனர். அதன் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்வில் முதல்வர் சூலூர் காவல் ஆய்வாளருக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிலையில் திடீரென சூலூர் காவல் நிலையத்திற்கு சர்ப்ரைஸ் -ஆக வந்த சுற்று வட்டார பகுதி வியாபாரிகள், ஆய்வாளர் மாதையனுக்கு மலர் கிரீடம் வைத்து மாலை அணிவித்து மேலும் அவர் பணி சிறக்க பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி