கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் குமாரதேவர் மாணாக்கர் அருள்நெறி மன்ற 36 ஆம் ஆண்டு தொடக்க விழா, அணிகாஞ்சி தமிழ் மன்றத் தொடக்க விழா, நொய்யல் தமிழ் மன்றத் தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் சாந்தலிங்க மருதாசலாடிகளார் அருளுரை வழங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மன்றங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.