கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூரில் விநாயகர் சதுர்த்தியை ஓட்டி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுத்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வழிபாடு எங்கள் உரிமை என்பதை முன்னுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அன்னூர் பேருந்து நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.