கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு; சுற்றுலா பயணிகள் குஷி

53பார்த்தது
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு; சுற்றுலா பயணிகள் குஷி
கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தளமாக விளங்குகிறது கோவை குற்றாலம். மேற்குத்தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு அவ்வப்போது வனத்துறை தடை விதிக்கிறது. இதனிடையே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இதனிடையே அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து, 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி