போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

567பார்த்தது
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் லட்சுமி (40). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் சுற்றுச்சுவர் குறித்த பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து லட்சுமி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று(செப்.1) கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு லட்சுமி வந்தார். திடீரென மண்எண்ணையை உடல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இதனை தடுத்து நிறுத்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி