கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் 28 ஆண்டுகளாக கீழ்நிலை ஊழியராக பணிபுரிந்து வந்த மல்லிகா என்பவர் வயது மூப்பின் காரணமாக இன்று பணி நிறைவு பெற்றிருக்கிறார். மல்லிகாவுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட நோட்டு மாலையை விமான நிலைய அதிகாரிகள் பரிசளித்துள்ளனர். ரூபாய் நோட்டு மாலையோடு வெளியே வந்த மல்லிகாவை விமான நிலையத்தில் குழுமி இருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வழி அனுப்பி வைத்தனர்.