

கோவை: 11 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்- சிவசங்கர்
தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடைபெற்ற புதிய பேருந்துகள் தொடக்க விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 13 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார். மேலும், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு 44 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், கருணை அடிப்படையிலான பணிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தமிழ்நாடு முழுவதும் 2,700 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், இதில் முதற்கட்டமாக கருணை அடிப்படையில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை இருப்பின் விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண் தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.