குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு

54பார்த்தது
குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று (செப்.5) இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது அதில், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சிசிடிவியை ஆராய்ந்தபோது, இளம்பெண் ஒருவர் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி