ஆளுயுர மாலை அணிவித்து ஜே.பி நட்டாவுக்கு வரவேற்பு

52பார்த்தது
கோவைக்கு வருகை புரிந்த ஜேபி நட்டாவுக்கு பாஜக தொண்டர்கள் ஆள் உயர மாலை, கிரீடம் வைத்து மேளதாளங்கள் முழங்க தொண்டர்கள் விமான நிலைய நுழைவாயில் வரை மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடக்கவுள்ள கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே. பி நட்டா பங்கேற்க உள்ளார்.

அதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்து இறங்கினர். பின்னர் சாலை மார்க்கமாக கேரளா செல்கிறார். முன்னதாக கோவைக்கு வருகை புரிந்த ஜே. பி நட்டாவிற்கு மேளதாளங்கள் முழங்க , பூக்கள் தூவி, பதாகைகளை ஏந்தி 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் வரவேற்பு செய்தனர்.

மேலும் ஜே.பி நாட்டாவை வரவேற்க தமிழிசை சௌந்தர் ராஜன், எச் ராஜா உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு வருகை புரிந்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி