கோவையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஜயின் கோட் படமானது இன்று(செப்.5) வெளியாகி உள்ளது. கோவையைப் பொருத்தமட்டில் காலை 7 மணி முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. 9 திரையரங்குகள் கொண்ட சின்னியம்பாளையத்தில் இயங்கி வரும் பிராட்வே தியேட்டரில் காலை முதலே விஜயின் ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் அவர் கட்சியை சார்ந்தவர்கள் படம் பார்க்க குவிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம் பார்ப்பதற்காக சின்னியம்பாளையத்தில் உள்ள பிராட்வே தியேட்டருக்கு வருகை புரிந்துள்ளார். அவருக்கு விஜயின் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர்.