கோவை பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், மாணவனை அடித்த குற்றத்திற்காக தமிழ் ஆசிரியர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 12ம் வகுப்பு மாணவர், தவறுதலாக வேறொரு செய்யுளை எழுதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவனின் மார்பிலும், அடி வயிற்றிலும் அடித்ததாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் கதறிய மாணவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவரின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.