கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று சித்தாபுதூரை சேர்ந்த 23 வயது வாலிபர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பெண்கள் அந்த வாலிபரிடம், பணம் கொடுத்தால் எங்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என விபசாரத்துக்கு அழைப்பு விடுத்தனர். இது குறித்து அந்த வாலிபர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து விபசாரம் நடத்திய துடியலூர் விஎல்கே நகரை சேர்ந்த ஜெயக்கொடி மனைவி ராஜம்(36), இடையர்பாளையத்தை சேர்ந்த முத்துவேல் மனைவி சத்யா(34) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய புரோக்கர்கள் சிக்கந்தர் பாஷா மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.