புச்சி பாபு கிரிக்கெட் போட்டி 2024க்காக கோவை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணியின் வீரர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒரு அங்கமான SRIOR - ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் இலவச புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர். டாக்டர். பி. குகன் குழந்தைகளுக்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி அவரிடம் விளக்கினார். இந்த வார்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ. பி. ஜே அப்துல் கலாம் அவர்களால் 2005 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதாகவும், இதில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.